Saturday, May 19, 2012

குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்;
நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.






உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள் 19.05.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தை பூமகள் சமூக மண்டபத்தில் இடம்பெற்றன.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற தொகுதியும் நூலகம் நிறுவனத்தின் செய்திமடலாகிய ‘புதிய நூலகம்’ அறிமுக நிகழ்வும் கவிஞர் யாத்திரிகன் தலைமையில் இடம்பெற்றன.

எழுத்தாளர் தெணியான், திரு த. இராஜதுரை, திரு த. தவேந்திரராஜா,  திரு மா. அனந்தராஜன்,  திரு ம. கணேசலிங்கம்,  அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா,  சி. க. இராஜேந்திரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வில் ஆசிரியர் க. தர்மதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’  நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் முதற்பிரதியையும் சிறப்புப்பிரதியையும் முறையே இலக்கிச்சோலை து. குலசிங்கம் அவர்களும் திரு த. இராசதுரை அவர்களும் பெற்றுக்கொண்டனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

எண்மிய நூலகமான 'நூலகம்' நிறுவத்தினால் வெளியிடப்படும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் ‘இணையவெளியில் நூலக நிறுவனம்’ என்ற பொருளில் எழுத்தாளரும் கவிஞருமான த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ‘புதிய நூலகம் செய்திமடல்கள்’ என்ற பொருளில் 6-12 வரையான இதழ்களைப் பற்றிய தனது பார்வையை சின்னராஜா விமலன் நிகழ்த்தினார்.

இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். 

வடமராட்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 வது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்




.



























நிகழ்வின் பின்னர் சுவாரஷ்யமான உரையாடல்












 பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்

Monday, May 14, 2012

இரண்டு நிகழ்வுகள் 

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரனின் "புனைவும் புதிதும்" நூல் வெளியீடும், நூலகம் நிறுவனத்தின் "புதிய நூலகம் செய்திமடல் அறிமுகமும் எதிர்வரும் 19.05.2012 அன்று நடைபெறவுள்ளது. 


Monday, March 12, 2012

எழுத்தாளர் ஆனந்தமயில் அவர்களுக்கு அஞ்சலிகள்





ஈழத்துப் புனைவிலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆனந்தமயில் 11.03.2012 காலமானார்.

'ஒர் எழுதுவினைஞனின் டயரி' என்ற சிறுகதைத்தொகுப்பினூடாக ஈழத்துப் படைப்பாளிகளில் நேர்த்தியான கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியவர். அன்னாருக்கு 'உயில்' குழுமத்தின் அஞ்சலியை செலுத்துகின்றோம்.


இணைப்புக்கள்
1.சோகம் தோய்ந்த ஒரு கடலோரத்தின் வாழ்வு-மு.புஸ்பராஜன்
http://www.kalachuvadu.com/issue-113/page71.asp


2. புனை மொழியின் செழுமையுடனான ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’- எம்.கே முருகானந்தன்

http://suvaithacinema.blogspot.com/2008/08/blog-post_31.html


3.ஆனந்தமயிலின் படைப்புலகம் - ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய பக்கம்-ஜெகன் 
http://thevajegan.blogspot.com/2009/07/blog-post_27.html


Saturday, January 28, 2012

நூலகம் தொடர்பான நிகழ்வு



நூலகம் தொடர்பான நிகழ்வொன்று 29.01.2012 இல் உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்வு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

Monday, January 09, 2012

'நூலகம்' 'புதிய நூலகம்' உரையும் அறிமுகமும்





நூலகம் நிறுவனத்தின் ஆவணமாக்கல் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் புதிய நூலகம் செய்திமடல் குறித்தும் (இதழ்கள் 9,10) உரையாடலும் அறிமுகமும் வரும் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

- உயில் செயற்பாட்டாளர்கள்

Friday, December 23, 2011

மாணவருக்கான கருத்தரங்கு


உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 'தற்காலக் கவிதைகள்' என்ற கருத்தரங்கு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு கவிஞர் தானா விஷ்ணு தலைமையில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தீல் 23.12.2011 காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் இ. இராஜேஸ்கண்ணன், சு. குணேஸ்வரன், செ. சுதர்சன், வேல் நந்தகுமார், த. அஜந்தகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பாடப்பரப்பின் குறித்த கவிதைகள் பற்றி உரையாற்றினர்.

நிகழ்வில் கருத்தரங்கு பற்றிய தமது கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர். நன்றியுரையை உயில் அமைப்பின் சார்பில் கவிஞர் யாத்திரீகன் நிகழ்த்தினார்.

பரீட்சை நோக்கினை மையமாகக் கொண்ட இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மனநிறைவினைத் தந்தது.

- உயில் செயற்பாட்டாளர்கள்