திங்கள், ஏப்ரல் 15, 2013

உயில் கலை இலக்கிய சங்கம் - இலக்கியச் சந்திப்பு



யாழ்ப்பாணம் வடமராட்சியை களமாகக் கொண்டு இயங்கும் உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் 15.04.2013 திங்கள் மாலை 3.30 மணிக்கு வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றது.

 மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நூல் அறிமுகவுரையும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேதநாயகம் தபேந்திரனின் “பூத்திடும் பனந்தோப்பு” என்ற புனைவுசாராப் படைப்பு நூல் பற்றிய அறிமுக நிகழ்வு முன்னதாக இடம்பெற்றது. நூல் பற்றிய உரையை பூ. நகுலன் நிகழ்த்தினார். வே. தபேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 பிரதான நிகழ்வாக கோ. கேதாரநாதனின் உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “பிறமொழித்திரைப்படங்களும் தமிழ்த்திரைப்படங்களும்” என்ற தலைப்பில் கருத்துப் பகிர்வு ஒன்றினை கேதாரநாதன் நிகழ்த்தினார். மிகப்பயனுடையாக அமைந்த மேற்படி நிகழ்வில் பங்குகொண்ட படைப்பாளிகள் மற்றும் ஆர்வலர்கள் ஆரோக்கியமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

 நிகழ்வின் இறுதியில் சு. குணேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்


 பூ. நகுலன் "பூத்திடும் பனந்தோப்பு" நூல் பற்றி உரை நிகழ்த்துகிறார்.


குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையுரை நிகழ்த்துகிறார்.

 கோ. கேதாரநாதன் "பிறமொழித் திரைப்படங்களும் தமிழ்த்திரைப்படங்களும்" என்ற பொருளில் உரை நிகழ்த்துகிறார்.




"பூத்திடும் பனந்தோப்பு" நூல் அறிமுக நிகழ்வில் 
நூலாசிரியர் வே. தபேந்திரன் ஏற்புரை நிகழ்த்துகிறார்

 கலந்துரையாடலில் சி. வன்னியகுலம்




நன்றியுரை சு. குணேஸ்வரன்

வியாழன், ஏப்ரல் 11, 2013

அழைப்பிதழ்

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு