ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஞானம் 150 வது சிறப்பிதழ் அறிமுகநிகழ்வு



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் சீனா உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பிதழ் பற்றிய அறிமுகவுரையை ஞானம் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. கட்டுரைகள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கவிதைகள் பற்றிய உரையை கவிஞர் கருணாகரனும்; சிறுகதைகள் பற்றிய உரையை சின்னராஜா விமலனும்; நேர்காணல், கருத்தாடல், இதழ்வடிவமைப்பு பற்றிய உரையை தானாவிஷ்ணுவும் நிகழ்த்தினர்.

சிறப்பிதழின் முதற்பிரதியை கலாபூஷணம் மா. அனந்தராசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

ஏற்புரையை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனும் நன்றியுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் - கமலசுதர்சன்
பதிவு – சு. குணேஸ்வரன்


























வியாழன், டிசம்பர் 27, 2012

ஞானம் 150 வது இதழ் அறிமுகநிகழ்வு அழைப்பிதழ்

 
'உயில்' கலை இலக்கிய சங்கத்தின் 5 வது நிகழ்வாக "ஞானம்" 150 வது  சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.00 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. 
ஆர்வலர்கள் பங்குபெறலாம்.
 

வியாழன், டிசம்பர் 20, 2012

'உயில்' ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு






உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வு 20.12.2012 வியாழன் மாலை 3.30 மணிக்கு வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
 
‘உயில்’ செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய செல்லத்துரை சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இரண்டு உரை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. 

எழுத்தாளர் நந்தினி சேவியர் “இலக்கிய உலகில் வெளிச்சமும் இருளும்” என்ற தலைப்பில் தனது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து தேவமுகுந்தனின் புதிய சிறுகதைத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. “கண்ணீரினூடே தெரியும் வீதி” தொகுப்புப் பற்றிய உரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். 

நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. விமர்சகர் அ.யேசுராசா, தி. செல்வமனோகரன், தானாவிஷ்ணு, ம. கணேசலிங்கம், செ. சதானந்தன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 

நன்றியுரையை ‘உயில்’ செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய கிருஸ்ணபிள்ளை நவநீதன் நிகழ்த்தினார். 

பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்