ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஞானம் 150 வது சிறப்பிதழ் அறிமுகநிகழ்வுஉயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் சீனா உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பிதழ் பற்றிய அறிமுகவுரையை ஞானம் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. கட்டுரைகள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கவிதைகள் பற்றிய உரையை கவிஞர் கருணாகரனும்; சிறுகதைகள் பற்றிய உரையை சின்னராஜா விமலனும்; நேர்காணல், கருத்தாடல், இதழ்வடிவமைப்பு பற்றிய உரையை தானாவிஷ்ணுவும் நிகழ்த்தினர்.

சிறப்பிதழின் முதற்பிரதியை கலாபூஷணம் மா. அனந்தராசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

ஏற்புரையை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனும் நன்றியுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் - கமலசுதர்சன்
பதிவு – சு. குணேஸ்வரன்


1 கருத்து:

 1. குணேஸ்வரனின் முகநூலில் நண்பர்கள் பதிவுசெய்தவை

  Sri Perumal, Ehamparam Ravivarmah, Kanthavarothayan Murugesu and 20 others like this.
  வேதநாயகம் தபேந்திரன் நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்
  Saturday at 10:11pm · Unlike · 1
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan வாழ்த்துக்கள்
  Yesterday at 6:47am · Unlike · 1
  Thavarajah Arulkumaran வாழ்த்துக்கள்
  Yesterday at 7:47am · Unlike · 1
  S.t. Kumaran வாழ்த்துக்கள்
  Yesterday at 9:02am · Unlike · 1
  Kanthavarothayan Murugesu முயற்சிக்கும், நிகழ்வுக்கும்

  முகநூல் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்.
  Yesterday at 5:55pm · Unlike · 1
  Arivon Naan ஞானம் 150 ஆவது சிறப்பிதழ் பெரும் சிரமத்தைக் கோரிய முயற்சி ; உழைப்புக்குப் பாராட்டுக்கள். எனினும், சில மனக்குறைகள் பரவலாக நிலவுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்தான். ஏற்கெனவே பிரசுரமான விடயங்கள் கூடுதலாகவுள்ளன ; புதிய ஆக்கங்கள் - உரிய திட்டமிடலுடன் இன்னும் கூடுதலாகப் பெறப்பட்டிருக்கலாம். பிரசுரமான விடயங்களின் படைப்பாளிகள் பலருக்கு, பிரசுரமாகப் போகும் விபரம் முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் ; அவ்வாறு செய்யப்படாதது படைப்பாளிகளை அலட்சியப்படுத்துவதாகும் ; அதைப்போலவே, இலவசமாகப் பிரதியைக் கொடுக்கவியலாவிட்டாலும், குறைந்த விலைக்காவது - ரூபா 500 அளவில் ( கொழும்பில் வெளியீட்டு விழா மண்டபத்தில் ரூபா 1000 இற்குத்தான் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது) - படைப்பாளிகளுக்கு வழங்கப்படவேண்டும்! ; ஞானம் ஆசிரியரிடம் பலர் இதனைச் சொல்லியும் இதுவரை, இவ்வாறு செய்யப்படவில்லை. இலங்கையில் அறிவுழைப்பு - படைப்பாற்றல், இன்னும்தான் உரியமுறையில் - பல இடங்களில் - மதிக்கப்படவில்லை! இது ஏமாற்றந்தரும் ஆரோக்கியமற்ற நிலைமையாகும்!
  Yesterday at 8:23pm · Unlike · 1

  பதிலளிநீக்கு