புதன், மார்ச் 26, 2014

உயில் - இரண்டாவது வெளியீடாக "விசையுறு பந்தினைப்போல்" நூல் வெளியீடு

உயில் கலை இலக்கிய சங்கத்தின் இரண்டாவது வெளியீடாக சி. விமலன் எழுதிய “விசையுறு பந்தினைப்போல்” என்ற விளையாட்டுத்துறைசார் பத்தி எழுத்துக்களைக் கொண்ட நூலின் வெளியீட்டு நிகழ்வு 26.03.2014 புதன் மாலை 4.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து இறைவணக்கத்தினை செல்வி தணிகா பஞ்சலிங்கம் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் திரு டி. எம் வேதாபரணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை முன்னாள் பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார். வடமாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் எஸ். எம். ராஜா ரணசிங்க சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார்.

வரவேற்புரையை வவுனியா வளாக கணனி விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் வி. செந்தூரன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை வடமராட்சி உதைபந்தாட்ட லீக் செயலாளரும் கிராம அலுவலருமான தி. வரதராஜன் நிகழ்த்தினார்.

பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் நூலை வெளியிட சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட எஸ். எம். ராஜா ரணசிங்க பெற்றுக்கொண்டார்.

மதிப்பீட்டுரையை யாழ்ப்பாண கிரிக்கற் மத்தியஸ்தர் சங்க முன்னாள் தலைவரும் இலங்கை மெய்வல்லுநர் சங்க தொழில்நுட்பக் குழு உறுப்பினருமாகிய ப. முருகவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் : யாத்திரிகன், துவாரகன்
பதிவு : சு. குணேஸ்வரன்
செவ்வாய், மார்ச் 04, 2014

சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்”

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரன் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுதியான “உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு 02.03.2014 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.


நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார். நிகழ்வில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து இறைவணக்கத்தினை செல்விகள் மீனுதா ரவிரதன், பிரபாஜினி நவரத்தினராசா ஆகியோர் இசைத்தனர்.

வரவேற்புரையை உயில் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய சி. விமலன் நிகழ்த்தினார். தொடர்ந்து வாழ்த்துரைகளை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசாவும்; வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ. சிறீகரனும் நிகழ்த்தினர்.

நூல் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் திரு இரா . இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை லெனில் மதிவானம் வழங்கி வைக்க, அதனை கலாபூஷணம் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் பெற்றுக் கொண்டார். கௌரப் பிரதிகளை மூத்த எழுத்தாளர் தெணியான் வழங்கி வைக்க அதனை ஓவியர் கோ. கைலாசநாதன், கவிஞர் தானாவிஷ்ணு, யா உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் கௌரி சேதுராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலின் சிறப்புப் பிரதிகளை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா வழங்கி வைத்தார்,


தொடர்ந்து மதிப்பீட்டுரை இடம்பெற்றது. மதிப்பீட்டுரையை கவிஞரும் விமர்சகருமாகிய கருணாகரன் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சு. குணேஸ்வரனும் நன்றியுரையை ஆசிரியர் திரு வீ.வீரகுமாரும் நிகழ்த்தினர்.

மேற்படி நூலை யாழ்ப்பாணம் புத்தகக்கூடம் (BOOK LAB) வெளியீடாக வந்துள்ளது. நூலின் முகப்பு அட்டை ஓவியத்தை ஓவியர் கோ. கைலாசநாதன் வரைந்துள்ளார். தானாவிஷ்ணுவின் வடிவமைப்பில் ஆகாயம் பதிப்பகத்தின் ஊடாக நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படங்கள் - யாத்திரிகன்


ஒளிப்படங்கள் : யாத்திரிகன்

இணைப்புக்கள்
http://tamil.dailymirror.lk/kalai/101840-2014-03-02-12-50-49.html