யாழ்ப்பாணம் வடமராட்சியைக் களமாகக் கொண்டியங்கும் ‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் 10 வது இலக்கிய நிகழ்வாக நூல் அறிமுகமும் அனுபவப் பகிர்வும் 24.08.2013 சனிக்கிழமை வதிரிவடக்கு மிசன் பாடசாலை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
சின்னராஜா விமலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் எழுத்தாளர் ‘அகில்’ எழுதிய கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத்தொகுதி பற்றிய உரைகள் இடம்பெற்றன. உரைகளை மூத்த எழுத்தாளர் கே. ஆர் டேவிட், இ. சு முரளிதரன் ஆகியோர் நிகழ்த்தினர். நூலின் அறிமுகப் பிரதியை கே. ஆர் டேவிட் வழங்க சி. வன்னியகுலம் பெற்றுக்கொண்டார்.
விமர்சகரும் எழுத்தாளருமான அ. யேசுராசாவுடனான அனுபவப் பகிர்வு தொடர்ந்து இடம்பெற்றது. “இலக்கிய உலக அனுபவங்கள்” என்ற தலைப்பில் தனது எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலில் சி. வன்னியகுலம், இ. இராஜேஸ்கண்ணன், சித்தாந்தன், தானாவிஷ்ணு, ஜி.ரி கேதாரநாதன், இ. சிறீஸ்கந்தராஜா, மு. அநாதரட்சகன் ஆகியோர் பங்குகொண்டனர். நன்றியுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.
பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்