வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

‘பிரபஞ்ச சுருதி’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச செயலக வழிகாட்டலில் உயில் கலை இலக்கிய சங்கம் ஏற்பாடு செய்த குப்பிழான் ஐ. சண்முகனின் பிரபஞ்சசுருதி (கவிதைத் தொகுதி) அறிமுக நிகழ்வும் கவிதா நிகழ்வும் 07.08.2015 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு ச. சிவசிறீ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சு. குணேஸ்வரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ந. மயூரரூபன் அறிமுகவுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து நூல் தொடர்பான உரையை கவிஞர் சோ. பத்மநாதன் நிகழ்த்தினார். குப்பிழான் ஐ. சண்முகனின் ஏற்புரையைத் தொடர்ந்து கவிதா நிகழ்வு இடம்பெற்றது.

நூலாசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன் தனது மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதன் பின்னணி பற்றிக் குறிப்பிட்டு அக்கவிதைகளை வாசித்தார். தொடந்து த. அஜந்தகுமார், சு. குணேஸ்வரன் ஆகியோரும் தமக்குப் பிடித்த கவிதைகளை வாசித்தனர். இறுதியாக சித்திராதரனின் நன்றியுரை இடம்பெற்றது. உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கரவெட்டிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்தனர்.

பதிவும் படங்களும் : துவாரகன்செவ்வாய், பிப்ரவரி 24, 2015

எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒர் இலக்கியச் சந்திப்பு
உயில் கலை இலக்கிய சங்கம் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் 24.02.2015 செவ்வாய் மாலை 4.00 மணிக்கு பருத்தித்துறை ஞானாலயத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒர் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றது. நிகழ்வில் தேவகாந்தன் தனது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
ஞாயிறு, ஜனவரி 18, 2015

சி. விமலனின் “ஏழிசை கீதமே” நூல் வெளியீடு
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சி. விமலன் எழுதிய “ஏழிசை கீதமே” என்ற தமிழ் திரைஇசைப்பாடல்கள் குறித்த பதிவுகள் அடங்கிய கட்டுரை நூல், கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் 18.01.2015 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறையில் அமைந்துள்ள ‘ஞானாலயம்’ மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஶ்ரீ தர்சனன் நிகழ்த்தினார். மதிப்பீட்டுரையை இசையமைப்பாளர் ஷப்தமி கலைக்கூடம் திரு கோ. சத்யன் (முரளி) நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...
 (படங்களும் பதிவும் :சு. குணேஸ்வரன்)