‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சமரபாகு சீனா உதயகுமாரின் “என் பேனாவின் நிதர்சனம்” என்ற கவிதைநூல் வெளியீட்டுவிழா 18.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.16 மணிக்கு யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு அ. அன்பழகன் தலைமை வகித்தார். வெளியீட்டுரையை கவிஞர் த. ஜெயசீலன் (பிரதேச செயலர் பருத்தித்துறை) நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை டாக்டர் மா. பிரபாகரனும் சிறப்புப்பிரதியை விரிவுரையாளர் எம். அனந்தகிருஸ்ணாவும் பெற்றுக் கொண்டனர். நூலின் நயப்புரையை சு. குணேஸ்வரனும், வேல்நந்தனும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.
மண்டபம் நிரம்பிய ஆர்வலர்களின் வருகையும் குறித்த நேரத்திற்கு நிகழ்வு தொடங்கி நிறைவுபெற்றமையும் கச்சிதமான ஒழுங்கமைப்பும் இந்நூல் வெளியீட்டில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.
பதிவு - சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் – யாத்திரிகன்