உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வு 20.12.2012 வியாழன் மாலை 3.30 மணிக்கு வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
‘உயில்’ செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய செல்லத்துரை
சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இரண்டு உரை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
எழுத்தாளர் நந்தினி சேவியர் “இலக்கிய உலகில் வெளிச்சமும்
இருளும்” என்ற தலைப்பில் தனது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து தேவமுகுந்தனின்
புதிய சிறுகதைத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. “கண்ணீரினூடே தெரியும் வீதி”
தொகுப்புப் பற்றிய உரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார்.
நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
விமர்சகர் அ.யேசுராசா, தி. செல்வமனோகரன், தானாவிஷ்ணு, ம. கணேசலிங்கம், செ. சதானந்தன்
ஆகியோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நன்றியுரையை ‘உயில்’ செயற்பாட்டாளர்களில்
ஒருவராகிய கிருஸ்ணபிள்ளை நவநீதன் நிகழ்த்தினார்.
பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக