சனி, மே 19, 2012

குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்;
நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.


உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள் 19.05.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தை பூமகள் சமூக மண்டபத்தில் இடம்பெற்றன.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற தொகுதியும் நூலகம் நிறுவனத்தின் செய்திமடலாகிய ‘புதிய நூலகம்’ அறிமுக நிகழ்வும் கவிஞர் யாத்திரிகன் தலைமையில் இடம்பெற்றன.

எழுத்தாளர் தெணியான், திரு த. இராஜதுரை, திரு த. தவேந்திரராஜா,  திரு மா. அனந்தராஜன்,  திரு ம. கணேசலிங்கம்,  அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா,  சி. க. இராஜேந்திரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வில் ஆசிரியர் க. தர்மதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’  நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் முதற்பிரதியையும் சிறப்புப்பிரதியையும் முறையே இலக்கிச்சோலை து. குலசிங்கம் அவர்களும் திரு த. இராசதுரை அவர்களும் பெற்றுக்கொண்டனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

எண்மிய நூலகமான 'நூலகம்' நிறுவத்தினால் வெளியிடப்படும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் ‘இணையவெளியில் நூலக நிறுவனம்’ என்ற பொருளில் எழுத்தாளரும் கவிஞருமான த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ‘புதிய நூலகம் செய்திமடல்கள்’ என்ற பொருளில் 6-12 வரையான இதழ்களைப் பற்றிய தனது பார்வையை சின்னராஜா விமலன் நிகழ்த்தினார்.

இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். 

வடமராட்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 வது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்
.நிகழ்வின் பின்னர் சுவாரஷ்யமான உரையாடல்
 பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக