சி. விமலனின் “கிளைநதியின் பிரவாகம்” என்ற படைப்பிலக்கியப் பார்வைகள் குறித்த நூல் வெளியீடு 23.02.2013 சனிக்கிழமை தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
உயில் கலை இலக்கிய சங்கத்தின் முதல் வெளியீடான இந்நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தலைமை தாங்கினார். இறைவணக்கத்தினை ஜெயபாரதி கௌசிகன் நிகழ்த்தினார். நிகழ்வில் வரவேற்புரையை துரைராஜா ராஜவேல் நிகழ்த்தினார்.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார், வெளியீட்டுரையை வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அவர்களும், மதிப்பீட்டுரையை யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை உதவிவிரிவுரையாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியை லயன் ஜி. கண்ணதாசன் (வைஷ்ணவி நகைப்பூங்கா) அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையையும் ஏற்புரையையும் நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார்.
பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக