சனி, பிப்ரவரி 22, 2014

உயில் ஏற்பாட்டில் நடைபெற்ற “பாலுமகேந்திரா : அழியாச்சுடர்” அஞ்சலியும் கருத்துப் பகிர்வும்




‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் “பாலுமகேந்திரா : அழியாச்சுடர்”
அஞ்சலியும் கருத்துப் பகிர்வும் நிகழ்வு 22.02.2014 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை வீதி, இமையாணனில் அமைந்துள்ள ஆகாயம் பதிப்பகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னதாக பாலுமகேந்திராவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் சுடரேற்றலும் இடம்பெற்றன. இவற்றினை முறையே ஜி.ரி கேதாரநாதன் மற்றும் குப்பிழான் ஐ. சண்முகன் நிகழ்த்தினர். தி. செல்வமனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரைகளை அ. யேசுராசா, சி.விமலன்ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை யாத்திரிகன் நிகழ்த்தினார். நிகழ்வில் ‘நம்பிக்கை’ மற்றும் ‘தப்புக்கணக்கு’ ஆகிய குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்


















ஞாயிறு, நவம்பர் 10, 2013

உயில் ஏற்பாட்டில் எழுநாவின் இரண்டு நூல்கள் விமர்சன அரங்கு



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீட்டகத்தின் இரண்டு நூல்களுக்கான விமர்சன அரங்கு 10.11.2013 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/ வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் எழுத்தாளர் அநாதரட்சகன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பரஞ்சோதி தங்கேஸ் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்ற நூல் பற்றிய விமர்சன உரைகளை தெணியான், ஏ.சீ.ஜோர்ச் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து அ. கௌரிகாந்தன் எழுதிய “யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலாநந்தரும்” என்ற நூலுக்கான விமர்சன உரைகளை இ. இராஜேஸ்கண்ணன், சி. ரமேஸ் ஆகியோர் நிகழ்த்தினர். நிறைவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நூல்களின் அறிமுகப் பிரதிகளை முறையே க.தணிகாசலம் வழங்க எஸ்.கே. இராஜேந்திரனும், ஜி.ரி கேதாரநாதன் வழங்க உடுவில் அரவிந்தனும் பெற்றுக் கொண்டனர்.
கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலில் க. தணிகாசலம், சொ. சிவபாலன், ம. சூரியசேகரன், வ. சந்திரராசா, கொற்றை பி. கிருஷ்ணானந்தன், கி. கணேசன், தெணியான், ஏ.சி.ஜோர்ச், இராஜேஸ்கண்ணன், ரமேஸ், க. தர்மதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்























 

சனி, அக்டோபர் 19, 2013

சீனா உதயகுமாரின் "என் பேனாவின் நிதர்சனம்" – கவிதைநூல் வெளியீடு




‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சமரபாகு சீனா உதயகுமாரின் “என் பேனாவின் நிதர்சனம்” என்ற கவிதைநூல் வெளியீட்டுவிழா 18.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.16 மணிக்கு யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு அ. அன்பழகன் தலைமை வகித்தார். வெளியீட்டுரையை கவிஞர் த. ஜெயசீலன் (பிரதேச செயலர் பருத்தித்துறை) நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை டாக்டர் மா. பிரபாகரனும் சிறப்புப்பிரதியை விரிவுரையாளர் எம். அனந்தகிருஸ்ணாவும் பெற்றுக் கொண்டனர். நூலின் நயப்புரையை சு. குணேஸ்வரனும், வேல்நந்தனும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.

மண்டபம் நிரம்பிய ஆர்வலர்களின் வருகையும் குறித்த நேரத்திற்கு நிகழ்வு தொடங்கி நிறைவுபெற்றமையும் கச்சிதமான ஒழுங்கமைப்பும் இந்நூல் வெளியீட்டில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.

பதிவு - சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் – யாத்திரிகன்