வெள்ளி, டிசம்பர் 23, 2011

மாணவருக்கான கருத்தரங்கு


உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 'தற்காலக் கவிதைகள்' என்ற கருத்தரங்கு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு கவிஞர் தானா விஷ்ணு தலைமையில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தீல் 23.12.2011 காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் இ. இராஜேஸ்கண்ணன், சு. குணேஸ்வரன், செ. சுதர்சன், வேல் நந்தகுமார், த. அஜந்தகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பாடப்பரப்பின் குறித்த கவிதைகள் பற்றி உரையாற்றினர்.

நிகழ்வில் கருத்தரங்கு பற்றிய தமது கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர். நன்றியுரையை உயில் அமைப்பின் சார்பில் கவிஞர் யாத்திரீகன் நிகழ்த்தினார்.

பரீட்சை நோக்கினை மையமாகக் கொண்ட இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மனநிறைவினைத் தந்தது.

- உயில் செயற்பாட்டாளர்கள்

















4 கருத்துகள்:

  1. வியாபாரச் சிந்தனை மிக்க இந்தக் காலகட்டத்தில் கருத்தரங்கையும் கையேட்டையும் இலவசமாகவே நடாத்தி வழங்கியது ஆச்சரியமூட்டுகின்றது

    பதிலளிநீக்கு
  2. அதில் பங்கெடுத்தவர்களும் அதற்கு உதவியவர்களும் நன்றிக்குரியவர்கள்.

    வருகைக்கு நன்றி நிர்மலன்

    பதிலளிநீக்கு
  3. thagam kondu azayum izakkiya veziyiz, uyizin sevai menmezum vazara vaazthkkaz.

    பதிலளிநீக்கு