வியாழன், டிசம்பர் 20, 2012

'உயில்' ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு






உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வு 20.12.2012 வியாழன் மாலை 3.30 மணிக்கு வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
 
‘உயில்’ செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய செல்லத்துரை சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இரண்டு உரை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. 

எழுத்தாளர் நந்தினி சேவியர் “இலக்கிய உலகில் வெளிச்சமும் இருளும்” என்ற தலைப்பில் தனது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து தேவமுகுந்தனின் புதிய சிறுகதைத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. “கண்ணீரினூடே தெரியும் வீதி” தொகுப்புப் பற்றிய உரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். 

நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது. விமர்சகர் அ.யேசுராசா, தி. செல்வமனோகரன், தானாவிஷ்ணு, ம. கணேசலிங்கம், செ. சதானந்தன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 

நன்றியுரையை ‘உயில்’ செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய கிருஸ்ணபிள்ளை நவநீதன் நிகழ்த்தினார். 

பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்













ஞாயிறு, ஜூலை 22, 2012

பேராசிரியர் செ. யோகராசா உரை



 வடமராட்சியைக் களமாகக் கொண்டு இயங்கும் 'உயில் கலை இலக்கிய சங்கம்' இலக்கியக் கருத்துரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

“அண்மைக்கால இலக்கியப்போக்கு” என்ற பொருளில் பேராசிரியர் செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம், மொழித்துறை) அவர்கள் நெல்லியடி Maths Centre இல் ஞாயிறு பி.ப 4.00 மணிக்கு கருத்துரை நிகழ்த்தினார்.

மேற்படி நிகழ்வு ஓவியர் கோ. கைலாசநாதனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகியது.

நிகழ்வில் செ. யோகராசா அவர்கள் உரை நிகழ்த்தும்போது கடந்த மூன்றாண்டுகளில் ஈழம் மற்றும் புகலிட இலக்கியப் போக்குப் பற்றிக் குறிப்பிட்டார். இக்காலத்தில் வெளிவந்த புனைவுசார் படைப்புக்கள், புனைவுசாராப் படைப்புக்கள் ஆகியன குறித்துக்காட்டும் பொருள் பற்றியும் அவற்றின் போதாமை பற்றியும் எடுத்துக்கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். நன்றியுரையை அஜந்தகுமார் நிகழ்த்தினார்.

பதிவும் படங்களும் சு. குணேஸ்வரன்




சனி, ஜூலை 21, 2012



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் 
 இலக்கியக் கருத்தரங்கு 

 “அண்மைக்கால இலக்கியப்போக்கு” என்ற பொருளில் பேராசிரியர் செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம், மொழித்துறை) அவர்கள் நெல்லியடி Maths Centre இல் ஞாயிறு 22.07.2012 பி.ப 3.15 மணிக்கு கருத்துரை நிகழ்த்துவார். ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம். 

- உயில் செயற்பாட்டாளர்கள்

ஞாயிறு, மே 27, 2012


இரண்டு நிகழ்வு - பத்திரிகை நறுக்குகள் 

 தினக்குரல் 27.05.2012

 தினமுரசு 21.05.2012

சனி, மே 19, 2012

குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்;
நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.






உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள் 19.05.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தை பூமகள் சமூக மண்டபத்தில் இடம்பெற்றன.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற தொகுதியும் நூலகம் நிறுவனத்தின் செய்திமடலாகிய ‘புதிய நூலகம்’ அறிமுக நிகழ்வும் கவிஞர் யாத்திரிகன் தலைமையில் இடம்பெற்றன.

எழுத்தாளர் தெணியான், திரு த. இராஜதுரை, திரு த. தவேந்திரராஜா,  திரு மா. அனந்தராஜன்,  திரு ம. கணேசலிங்கம்,  அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா,  சி. க. இராஜேந்திரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வில் ஆசிரியர் க. தர்மதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’  நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் முதற்பிரதியையும் சிறப்புப்பிரதியையும் முறையே இலக்கிச்சோலை து. குலசிங்கம் அவர்களும் திரு த. இராசதுரை அவர்களும் பெற்றுக்கொண்டனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

எண்மிய நூலகமான 'நூலகம்' நிறுவத்தினால் வெளியிடப்படும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் ‘இணையவெளியில் நூலக நிறுவனம்’ என்ற பொருளில் எழுத்தாளரும் கவிஞருமான த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ‘புதிய நூலகம் செய்திமடல்கள்’ என்ற பொருளில் 6-12 வரையான இதழ்களைப் பற்றிய தனது பார்வையை சின்னராஜா விமலன் நிகழ்த்தினார்.

இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். 

வடமராட்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 வது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்




.



























நிகழ்வின் பின்னர் சுவாரஷ்யமான உரையாடல்












 பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்

திங்கள், மே 14, 2012

இரண்டு நிகழ்வுகள் 

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரனின் "புனைவும் புதிதும்" நூல் வெளியீடும், நூலகம் நிறுவனத்தின் "புதிய நூலகம் செய்திமடல் அறிமுகமும் எதிர்வரும் 19.05.2012 அன்று நடைபெறவுள்ளது.